FacebookTwitterYouTubeDailymotionScribdCalameo
SlideshareIssuuPinterestWhatsAppInstagramTelegram
Chat About Islam Now
Choose your country & click on the link of your language.
Find nearby Islamic centers & GPS location on the map.

Our Islamic Library contains:
Islamic TVs channels LIVE
Islamic Radios LIVE
Multimedia ( Videos )
Multimedia ( Audios )
Listen to Quran
Articles
Morality in Islam
Islam Q & A
Misconceptions
Interactive files & QR codes
The Noble Qur'an
Understanding Islam
Comparative Religions
Islamic topics
Women in Islam
Prophet Muhammad (PBUH)
Qur'an and Modern Science
Children
Answering Atheism
Islamic CDs
Islamic DVDs
Presentations and flashes
Friend sites

Articles' sections



Author:


Go on with your language:
qrcode

இந்து மதமா, இஸ்லாம் மதமா சிறந்தது? அது ஏன்?

Viewed:
2275

இந்து மதமா, இஸ்லாம் மதமா சிறந்தது?

அது ஏன்?

இந்து வேதத்தில் முஹம்மத் நபி

அறிவியல் பிரிவு இடம் இஸ்லாமியம் கேள்வி-பதில்

Y.M.ஸெய்யித் இஸ்மாஈல்

மொழிபெயர்த்தவர்

முஹம்மத் அமீன்

மீளாய்வு செய்தவர்

இந்து மதமா, இஸ்லாம் மதமா சிறந்தது? அது ஏன்?

அஷ்ஷெயக் அல்முனஜ்ஜித்

மொழி பெயர்த்தோன்

ஸெய்யித் இஸ்மாஈல் இமாம் இப்னு யஹ்யா மெளலானா

(ரஷாதீ-பெங்களூர்)

இந்து வேதத்தில் முஹம்மத் நபி

 “நான் இந்து சமுத்திரத்தில் உள்ள மொரீஷஸ் நாட்டைச் சேர்ந்தவன்.  இந்து மதமா, இஸ்லாம் மதமா சிறந்தது? அது ஏன்? என்பது பற்றி தயை கூர்ந்து எனக்கு விளக்கம் தாருங்கள்.” என்று இந்து மதத்தைச் சார்ந்த ஒருவர் கேட்ட கேள்விக்கு அஷ்ஷைக் அல்முனஜ்ஜித் அவர்கள்  பின் வருமாறு பதில் தருகின்றார்.

புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அல்லாஹ் ஏற்றுக் கொண்ட மதம் இஸ்லாம் ஒன்றுதான். எனவே இவ்வுலகில் மனிதனுக்கு மகிழ்ச்சியையும், மறு உலகில் பாதுகாப்பையும், வெற்றியையும் தரும் படியான ஒளி மயமான அல் குர்ஆனை அல்லாஹ் இறக்கி வைத்தான். இவ்வாதத்தை உறுதிப் படுத்தும் ஆதாரங்களையும் அத்தாட்சிகளையும் இஸ்லாம் வேதம் தன்னகத்தே வைத்துள்ளது.

வேதத்தின் ஆதாரமும், அதன் அத்தாட்சியும் மனிதனுக்கு எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாதவாறு விளக்கமாகவும், தெளிவாகவும் இருப்பதுடன், இது போன்ற ஒன்றை யாராலும் கொண்டு வர இயலாமல் இருப்பதும் அவசியம். அல்லாஹ்வின் வேதத்தை பொய்ப்பிப்பதற்காக மந்திர வாதிகள் கொண்டு வந்த வளுவற்ற பொய்யான ஆதாரங்களும், அத்தாட்சிகளும் என்ன என்பதை அல்லாஹ் நன்கறிவான். எனவேதான் தன் வஹீயை - வேதவாக்குகளைப் பெற்ற தூதர்களின் உண்மை நிலையை மக்களுக்கு உறுதி படுத்துவதன் மூலம், அவர்களின் மீது மக்கள்  விசுவாசம் கொள்ளவும், அவர்களைப் பின்பற்றவும் ஏதுவாக, அவர்ளுக்குப் பக்க பலமாக முஃஜிஸாத்துக்கள் எனும் அற்புதங்களையும், இன்னும் பல அத்தாட்சிகளையும் அல்லாஹ் வழங்கினான்.

இதன்படி இஸ்லாம் மார்க்கத்தின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அல்லாஹ் பல அற்புதங்களை வழங்கினான். நபியவர்கள் பெற்ற முஃஜிஸாத்துக்கள்- அற்புதங்கள் ஏராளம். இவை பற்றிப் பாரிய ஏடுகள் பல எழுதப்பட்டுள்ளன. எனினும் இந்த எல்லா அற்புதங்களிலும் மிகவும் மேலானது கண்ணியமிகு அல்குர்ஆனாகும். அவர்களால் இயலு மென்றால் சகல கோணத்திலும் இது போன்று பரிபூரணமான ஒன்றைக் கொண்டு வருமாறு  அல்குர்ஆன் அறபு மக்களிடம் சவால் விட்டது. ஆனால் சொல் வளம் மிகு அற்புதமான அல்குர்ஆன் போன்ற ஒன்றை சொல் வளத்திலும், இலக்கியத்திலும் உச்ச நிலையைப் பெற்றவர்கள் என்று வரலாற்றாசிரியர்களால் அத்தாட்சிப் படுத்தப்பட்ட குரைஷிக்குல அறபு இலக்கிய மேதைகளால் கூட கொண்டு வர இயலவில்லை.

மேலும் அல்குர்ஆனிலும், நபியின் வாக்குகளிலும் விஞ்ஞான கருத்துக்கள் பலவும் அடங்கியுள்ளன. எந்தவொரு மனிதனாலும் விஞ்ஞான கருத்தொன்றை முன் வைக்க வாய்ப்பில்லாத அந்த யுகத்தில், இத்தகைய விஞ்ஞான கருத்துக்கள் பலவற்றை அல்குர்ஆனும், நபியின் வாக்குகளும் முன்வைத்துள்ளன என்றால், அவை அல்லாஹ்வின் வேத வாக்கல்லாதிருக்க  இயலாது. இது அல்குர்ஆன் அற்புதமானது என்பதற்கு ஒரு அத்தாட்சியாகும். மேலும் அல்குர்ஆனில் மறைவான விடயங்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளன. முன்னர், நபியவர்கள் சித்திர வரலாறு பற்றிய அறிவை பெற்றிருக்க வில்லை. அவ்வாறே அன்னார் வாழ்ந்த அந்நாட்டில், ஒரு சில கிறீஸ்தவ வேதக்காரர்களை, யூதர்களைத் தவிர வேறு எவரிடமும் இது பற்றிய அறிவு இருக்கவும் இல்லை. அவ்வாறான சூழ் நிலையில் அல்குர்ஆனும், நபியவர்களின் வாக்குகளும் பண்டைய காலத்தில் நடைபெற்ற சில மறைவான சம்பவங்கள் பற்றியும், பிற் காலத்தில் நடக்கவிருக்கும் மறைவான இன்னும் சில சம்வங்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ளன என்றால், அதுவும் அல்குர்ஆன் அற்புதமானது என்பதற்கு இன்னுமொரு  ஆதாரம்தான்.      

மேலும், பின்பற்றுவதற்கு ஏற்றவாறு அற்புதமான அமைப்பில் சட்டங்களை அல்குர்ஆன் முன்வைத்துள்ளது. அதில் தனி மனிதனுடனும், குடும்பத்துடனும் சம்பந்தப்பட்ட சட்டங்களும், சர்வதேச உறவுகளும், சமூக நீதியும் எவ்வாறு அமையப் பெற வேண்டும் என்பதற்கு அவசியமான அடிப்படைகளும் தெளிவு படுத்தப்பட்டுள்ளன. அது மாத்திரமின்றி இருலோகத்தையும், மற்றும் மறைவான விடயங்கள், பாக்கியம், அபாக்கியம் பற்றிய விடயங்கள் பற்றிய தெளிவையும் அல்குர்ஆன் முன்வைத்துள்ளது. இத்தகைய அற்புதமான செய்திகள் யாவும் ஒரு உம்மி - எழுத, வாசிக்கத் தெரியாத நபியின் - தூதரின் வாயிலாக வெளி வந்துள்ளன. ஆகையால் இவை அவரின் வாய்மைக்கும், நம்பகத் தன்மைக்கும் சிறந்த எடுத்துக் காட்டுகளாகும். மேலும் அன்னாரின் இத்தகைய பண்புகளுக்கு அன்னாரின் தோழர்கள் மாத்திரமின்றி அன்னாரின் பகைவர்களும் கூட சாட்சி பகர்ந்தனர். இத்தகைய மாமனிதர் பதினான்கு நூற்றாண்டு காலமாக இருந்து வரும் இஸ்லாமிய நாகரிகத்தைக் கட்டியெழுப்புவதற்காக அல்குர்ஆனைத் தாங்கி வந்தார்.

எனவே நமது பார்வையில் சிறந்த வேதமான இஸ்லாம் வேதம், உங்களைத் தனித்துவமான ஒரு சக்தியுடன் தொடர்பு படுத்துகின்றது. அந்த சக்திதான் உங்களைப் படைத்தது, உங்கள் மீது அருள் புரிந்தது. மேலும் அது தான் வானம் பூமியின் திரவுகோலுக்குச் சொந்தக்காரன் ஆகிறது. மேலும் நீங்கள் அதன் மீது நம்பிக்கை கொண்டு, நற்கருமங்களையும் செய்து வந்தால், மறு உலகில் உங்கள் மீது அருள் புரிந்து, உங்களுடன் இருக்கக் கூடியதும் அதுதான். அந்த சக்திதான் அல்லாஹ் என்ற மெய் பொருள். அவன் ஒருவன், அவன் யாருடைய உதவியின் பாலும் தேவையற்றவன். அவன் உங்களை தன்னுடன் தொடர்பு படுத்துகின்றானே அல்லாது வேறு எதனுடனும் உங்களைத் தொடர்பு படுத்த மாட்டான். ஏனெனில் அவனல்லாத அனைத்தும் அவனின் சிருஷ்டிகள், அவை யாவும் பலவீனமானவை, அவன் பால் தேவையுள்ளவை.

ஆகையால் வர்க்க பேதத்தை அங்கீகரித்து வரும் ஏனைய வேதங்கள், மெய் பொருளான அல்லாஹ் அல்லாதவற்றுக்கு மனிதன் அடிபணிவதையும், கட்டுப்படுவதையும் வழியுருத்தி வருகின்ற போது, அதிலிருந்து அவனை  அல்லாஹ் விடுதலை செய்ய விரும்புகின்றான். அவ்வாறே மனிதனின் இழிவுக்கும், அநியாயத்திற்கும், நெருக்கடிகளுக்கும், அட்டூழியங்களுக்கும் காரணமாக இருக்கும் இவ்வுலகத்தை விட்டும் அவனை அல்லாஹ் காப்பாற்ற விரும்புகின்றான்.

கலாநிதி அல்அஃழமீ அவர்கள் தனது

"دراسات في اليهودية والمسيحية وأديان الهند  என்ற நூலில், 565ம் பக்கத்தில் الطبقات  في المجتمع الهندوسي  , இந்து சமூகத்தில் ஜாதி பேதம் என்ற ஆய்வில் இந்து சமூகத்தின் நிலைப்பாட்டை, இவ்வாறு விவரிக்கின்றார்கள்:

“அல்லாஹ் அல்லாதவற்றுக்கு அடிபணிவதையும், அவற்றை வணங்குவதையும் இந்து மதம் அங்கீகரிக்கின்றது. ஆகையால் பசுக்களுக்கும், ஏனைய படைப்புக்களுக்கும் அடிபணிவதைக் கூட இந்து மதம் அங்கீகரித்துவிட்டது. இதனால் அல்லாஹ் மனிதனுக்குப் பகுத்தறிவைக் கொடுத்து அவனைக் கண்ணியப் படுத்தியிருக்கும் போது, மிருகங்களை தூய்மைப்படுத்தியும், கண்ணியப்படுத்தியும் வரும் நிலைக்கு அவனை ஆளாக்கியுள்ள இந்து மதம், அவற்றுக்கு அவனை  அடிமையாகவும் ஆக்கி விட்டது. ஆனால் அவையோ மற்றவர்கள்ளுக்கு யாதொரு நன்மையை அல்லது ஒரு தீமையை விளைவிப்பது ஒரு புறமிருக்க தனக்குத் தானே எதனையும் விளைவித்துக் கொள்ளவேனும் திராணியற்றவையாக  இருக்கின்றன.

மகிழ்ச்சியை பெற்றுத் தரவேண்டும் என்பதே எல்லா வேதங்களின் இலக்காகும். ஆகையால் இம்மையிலும் மறுமையிலும் மகிழ்வைப் பெறும் வழியைக் காட்டும் பூரணமான சட்டங்களையும், ஒழுங்கு முறைகளையும் கொண்டுள்ள ஒரு வேதம்தான், சிறந்த வேதமாக இருக்க முடியும். அது அல்லாஹ்வின் - ஏக இறைவனின் வழிகாட்டலின்றி சாத்தியமில்லை. எனவே பூரண சந்தோசத்தை உறுதி செய்யும் வகையில் பொருளாதார, அரசியல், சமூக, குடும்ப, உளவியல் சார்ந்த எல்லா கோணத்திற்கும் தேவையான சகல வழிகாட்டல்களும் இஸ்லாம் வேதத்தில் அடங்கியுள்ளது. ஆரம்ப காலத்தில் இஸ்லாமிய சமூகம் இதையெல்லாம் எடுத்து நடந்த போது, அவர்களால் எல்லாவித நன்மைகளையும், நீதியையும், நேர்மையையும் உலகில் ஸ்தாபிக்க முடிந்தது. ஆனால் அதனை எப்பொழுது அவர்கள் கைநழுவ விட்டார்களோ, அப்பொழுது அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அந்த வளங்களை எல்லாம் அவர்கள் இழக்கலானர்.

மேலும் உண்மையான முந்திய வேதங்களை நாம் ஏற்றுக் கொள்ளும் அதே சமயத்தில், அதன் சட்டங்களை காலத்தின் தேவைக்கேற்ப,  காலத்துக்கும் இடத்துக்கும் பெருத்தமான  வகையில் மாற்றியமைத்த இறுதி மதமான இஸ்லாம் மதமே சிறந்த வேதம் என்பது எமது நம்பிக்கை.

மேலும், முந்திய வேதங்களில் இறுதி  நபி தொடர்பாக குறிப்பிடப் பட்டுள்ள விடயங்கள் பற்றியும், அன்னாரின் பண்புகள், அடையாளங்கள் பற்றியும் இஸ்லாம் வேதம் அவ்வாறே உறுதி செய்கிறது. இறுதி நபியின் பெயர் முஹம்மத் (ஸல்) என்பதையும், அல்லாஹ் தூதுவத்தை அன்னாருடன் நிறைவு செய்து விடுவான்  என்பதையும் புராண தூதர்கள் அறிந்திருந்தனர் என்பதை அல் குர்ஆன் எமக்கு அறியத் தருகின்றது,

وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمْ مِنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنْصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ

آل عمران 81

“நபிமார்களிடம் அல்லாஹ் வாக்குறுதி வாங்கிய சமயத்தில் “வேதத்தையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுத்திருக்கின்றேன். இதற்குப் பின்னர் உங்களிடம் உள்ளதை உண்மைப்படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை நீங்கள் உண்மையாக நம்பிக்கை கொண்டு நிச்சயமாக அவருக்கு உதவி செய்ய வேண்டும். இதனை நீங்கள் உறுதிப்படுத்தினீர்களா? என்னுடைய இக்கட்டளையை எடுத்துக் கூறினீர்களா?” என்று கேட்டதற்கு, அவர்கள் “நாங்கள் அங்கீகரித்துக் கொண்டோம்” என்றே கூறினார்கள். அப்போது இறைவன் “நீங்கள் சாட்சியாயிருங்கள். நானும் உங்களுடன் சாட்சியாக இருக்கின்றேன்” என்று கூறினான்.(3/81)

எனவே முந்திய வேதக் கிரந்தங்களில் சில உண்மைச் செய்திகள் திரிவுபடுத்தப்படாமல் இருப்பதையும், அவற்றில் இந்த கண்ணிய மிக்க நபியின் வருகை பற்றிய சுப செய்தி இருப்பதையும் காண முடிகின்றது. முன்னைய யூத வேதத்திலும், கிரிஸ்த்துவ வேதத்திலும் இந் நபியின் வருகை பற்றி விபரிக்கப்பட்டுள்ளது. எனினும் இங்கு அது பற்றிக் குறிப்பிட வேண்டிய தேவையில்லை. இங்கு இந்து வேத நூல்களில் முஹம்மது நபியின் வருகை பற்றிய சுப செய்தி வந்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுவதே அவசியம்.

இந்தக் கூற்றுக்களை கலாநிதி zழியா உர்ரஹ்மான் அவர்கள் தனது,

“யூத, கிரிஸ்த்தவமும், இந்தியாவின் வேதங்களும் பற்றிய ஆய்வு” என்ற நூலில் 703 முதல் 746ம் பக்கம் வரையில் எடுத்துக் காட்டியுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த கலாநிதி அவர்கள் இவ்வேத நூல்களின்  மொழியை நன்கு அறிந்தவரும், அது பற்றிய பாண்டித்தியமும் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இனி கலாதி அவர்கள் இந்து வேத நூல்களிலிருந்து நகல் பண்ணியுள்ள சில செய்திகளைக் கவனிப்போம்:-

  • “அச்சமயத்தில், கல்கியை “ஷாம்ப ஹல்லி” எனும் ஊரில், இலகிய மனமுள்ள  “விஷ்னுயாஸ்” என்பவரின் மனைவி, அவர் தன் இல்லத்தில் ஈன்றெடுப்பார் என்று “பஹ்குப்த் புராண்” என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. (பஹ்குப்த்- 18/2)

     ஷாம்ப ஹல்லி என்பது அல்பலதுல் அமீன், பாதுகாப்பான ஊர் என்ற அறபு சொல்லுக்கும், விஷ்னுயாஸ் என்பது அப்துல்லாஹ், அல்லாஹ்வின் அடியான் என்ற அறபு சொல்லுக்கும், கல்கி என்பது பாவங்களை விட்டும் பரிசுத்தமானவர் என்ற அறபு சொல்லுக்கும் சம்மாகும். எனவே இதில் குறிப்பிட்டுள்ளது போன்று முஹம்மது நபியின் தந்தையின் பெயர் அப்துல்லாஹ் என்பது பிரசித்தம். மேலும் மக்கா நகரை அல்பலதுல் அமீன், பாதுகாப்பான ஊர் என்று அல் குர்ஆன் குறிப்பிடுகின்றது. என்பது இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.

  • விஷ்னுயாஸின் இல்லத்தில் அவரின் மனைவி சோமவதீ, கல்கியை ஈன்றெடுப்பார் என்று கல்கி புராண் குறிப்பிடுகின்றது. (கல்கி புராண்-11/2)

சோமவதீ என்பதன் பொருள் பாதுகாப்பு பெற்றவள் என்பதாகும். இது ஆமினா - பாதுகாப்பு பெற்றவள் என்ற அறபுச் சொல்லுக்குச் சமமாகும்.   எனவே இதில் குறிப்பிட்டுள்ளது போன்று நமது தூதர் முஹம்மது நபியின் தாயின் பெயர் ஆமினா என்பதும் பிரசித்தமானது என்பதும் கவனிக்கத் தக்கதாகும்.

  • அன்னார் மாதவ மாதத்தில் 12ம் நாள் பெளர்ணமி தினத்தில் பிறப்பார் என்று கல்கி புராண் குறிப்பிடுகின்றது. (கல்கி புராண்-15/2) மாதவ என்பதன் பொருள் உள்ளத்திற்கு மகிழ்ச்சியைத் தருதல் என்பதாகும். அறபு மாதம் றபீஃ என்பதன் பொருள் வசந்தம் என்பதாகும். எனவே மாதவ மகிழ்ச்சிக்கும் றபீஃ வசந்தத்திற்கும் இடையே உள்ள சம்பந்தம் தெளிவு. எனவே இதில் குறிப்பிட்டுள்ளது போன்று முஹம்மது நபியவர்கள் ரபீஉல் அவ்வல் மாதத்தில் 12ம் நாள் பிறந்தார்கள் என்ற செய்தி நபியவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய எல்லா ஏடுகளிலும் பதியாகவுள்ளது என்பதுவும் ஈண்டு குறிப்படத் தக்கதாகும்.

  • கல்கி - பாவங்களை விட்டும் தூய்மையானவர் என்பவர் முக்கியமான எட்டு பண்புகளைக் கொண்டவர் என்று இந்து வேதங்கள் கூறுகின்றன. அவையாவன:-

PRAGYA                     -           எதிர்வு கூறக்கூடியவர்,

GULINATA                 -           தன் சமூகத்தில் மிகச் சிறந்தவர்,

INDRIDAMAN           -           தன் ஆத்மாவை மிகைத்தவர்,

SHRUT                        -           இறை அசரீரியைப் பெறுபவர்,

PRAKRAM                  -           பராக்கிரமசாலி,

ABHU BHASHITA     -           கொஞ்சமாக பேசுபவர்,

DAN                            -           கண்ணியமானவர்,

KRITAGYATA           -           அழகன் என்பவை.

இவை  நபியவர்களின் சில பண்புகளாகும். அன்னலாரின் இந்த நல்ல பண்புகளை அறபு சமூகம் அனைத்தும் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டவர், ஏற்றுக்கொளலாதவர் என்ற பாகுபாடின்றி சகலரும் ஏற்றுக்கொண்டனர்.

  • அன்னார் குதிரையில் சவாரி செய்வார். அவரிடமிருந்து பிரகாசம் வெளியாகும். அவரின் அழகுக்கும், கம்பீரத்திற்கும் நிகரில்லை, அவர் கத்னா- விருத்தசேதனம் செய்யப்பட்டிருப்பார். பல்லாயிரம் பேர்களை இருளிலிருந்தும் இறை நிராகரிப்பிலிருந்தும் அவர் வெளியேற்றுவார். (பஹ்குப்த் புராண்/20-2-12)

  இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் யாதெனில், விருத்தசேதனம் செய்து கொள்ளும் வழமை இந்துக்களிடம் இல்லை. ஆனால் முஹம்மது நபியின் சமுதாய ஆண்களின் மீதோ விருத்தசேதனம் செய்து கொள்வது கடமை என்பதாகும்.

  • “அவர் தன்னுடைய தோழர்களின் உதவியுடன் சாத்தான்களை அழித்து விடுவார். மேலும் அன்னாரின் போரில் அவருக்கு உதவியாக அமரர்கள் பூமிக்கு இறங்கி வருவார்கள்” (கல்கி புராண், 7 5/2)

  எனவே இதில் குறிப்பிட்டுள்ளது போன்று நபியவர்களுக்கு மிகவும் நெருக்கமான தோழர்கள் நால்வர் இருந்தனர். அவர்கள்தான் அன்னல் நபியவர்களுக்கப் பின் ஆட்சி செய்த நேர்வழி பெற்ற நான்கு கலீபாக்கள். மேலும் இந்நான்கு பேரும் நபியவர்களுக்குப் பின் மனிதரில் சிறந்தவர்கள் என்பது இஸ்லாமிய அறிஞர்களின் ஒருமித்த கருத்தாகும்.

  • “அன்னார் தன் பிறப்பின் பின் பர்ஷே ராம் - மகா ஆசானிடம் கல்வியைத் தேடி மலைக்குச் செல்வார்கள். பின்னர் வடக்கிற்குச் செல்வார். அதன் பின் தன் பிறந்தகத்திற்கு மீண்டும் வருவார். (கல்கி புராண்)

          எனவே இதில் குறிப்பிட்டுள்ளது போன்று ஹிரா குகையில் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வரும் வரையில் நபியவர்கள் காத்திருந்தார்கள். பின்னர் வடக்குத் திசையிலுள்ள மதீனா நகருக்குப் பயனமானார்கள். அதன் பின் மக்காவின் மீது அன்னார் வெற்றி கொண்டு மீண்டும் அங்கு திரும்பினார்.

  • “அன்னாரின் மேனியிலிருந்து வெளிப்படும் வாசனையை மக்கள் நுகர்வர். மேலும் அன்னாரின் மேனியிலிருந்து வெளியாகும் வாசனை காற்றில் கலந்து அது மக்களின் ஆத்மாவிலும், உள்ளத்திலும் சங்கமமாகும். (பஹ்குப்த் புராண்- 21/2/2)

  • “முதலில் மிருகத்தை அறுப்பவரும், மிருகப் பலி கொடுப்பவரும் அவர்தான். மேலும் அன்னார் சூரியனைப் போன்று பிரகாசமாகத் திகழ்வார்” (சாம வேதம்- 8/6/3)

  • பின்னர் தன் தோழர்கள் சகிதம் ஒரு ஆத்மீக ஆசான் வருவார். அவர் மஹாமித் -- புகழுக்குரியவர் எனும் பெயர்களை கொண்டு பிரசித்தமடைவார். மேலும் ஆட்சித் தலைவர் ஆன்னாரை நோக்கி “பாலை வனத்தில் வாசம் செய்பவரே! சாத்தான்களைத் தோழ்வியுறச் செய்பவரே! அற்புதங்களின் சொந்தக்காரரே! சகல இணைகளை விட்டும் நீங்கி உண்மையின் மீது நிலைத்திருப்பவரே! இறை ஞானத்தையும், இறை அன்பையும் பெற்றவரே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக. நான் உங்களின் அடிமை, உங்களின் பாதத்தின் வாழ்கின்றேன், என்று கூறியபடி அன்னாரை வரவேற்பார். (பஹாவிஷ்யா புராண், 8-5/3/3)

  • அக்கால கட்டத்தில் பொது நலன்கள் மனிதர்களிடம் வெளிப்படும். மேலும் உண்மை வழிந்தோடும். இன்னும் முஹம்மதுவின் வெளிப்பாடுடன் இருள்கள் யாவும் நீங்கி அறிவு ஞானத்தின் ஜோதி உதயமாகும். (பஹ்குப்த் புராண்* 76/2)

  • “தெளிவான மார்க்கத்தின் சொந்தக்காரனுக்கு தேவர் என்று பெயர் சூட்டுகின்றேன். நீங்கள் காணிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக உங்களை மத்திய பூமிக்கு மேல் ஆக்கியுள்ளேன்” (ரிக் வேதம், 4/29/3)

  • மேலும் அதர்வ வேதத்திலும் ரிக் வேதத்திலும் “நராஷஸ்னஸின்” – புகழுக்குரியவரின் வருகை பற்றியும், அவரின் பண்புகள் பற்றியும் பல சுப செய்திகள் வந்துள்ளன. அவற்றில் சில வறுமாறு:

“பூமியிலுள்ளவர்களில் அவர் நிச்சயமாக மிக அழகானவர். அவரின் பிரகாசம் வீடு வீடாக ஒளி கொடுக்கும். ஒட்டகத்தில் சவாரி செய்யும் அவர் பாவத்திலிருந்து மனிதர்களைப் தூய்மைப் படுத்துவார். அவருக்குப் பண்ணிரெண்டு மனைவியர் இருப்பர்....”. ஜனங்களே! கேளுங்கள். “நிச்சயமாக ‘நராஷஸ்னஸின் புகழ் ஒங்கும். அவர் போற்றப்படுவார். நிச்சயமாக அவர் அறுபதாயிரத்து தொண்ணூர் பேர் புடை சூழ இடம் பெயர்வார். சுத்தமான நூறு பொற் காசுகளையும், அதி வேகமாக ஓடும் பத்து குதிரைகளையும், இன்னும் முன்னூறு குதிரைகளையும் அவர் இனாமாகப் பெறுவார்.”

    எனவே இதில் குறிப்பிட்டள்ளது போன்று நபியவர்களின் மனைவியர் பண்ணிரெண்டு பேர் என்பதை அன்னாரின் வாழ்க்கை சரிதை குறிப்பிடுகின்றது.        

  • “நல்ல குணம் படைத்த ஒரு மனிதர் சிந்து நாட்டு மன்னர் “யஹ்வஜ்ஜி” இடம் வந்தார். அவர், மன்னரே! இந்திய நாட்டின் சகல வேதங்களை விடவும் உங்களின் ‘ஆரிய தர்ம’ வேதம் மேலோங்கியிருக்கின்றது. எனினும் மகா இறைவனின் கட்டளையின்படி நல்ல உணவுகளை எல்லாம் உற்கொள்ளும் ஒரு மனிதரின் வேதத்தை நான் வெளிப்படுத்துவேன். அவர் விருத்தசேதனம் செய்திருப்பார். அவரின் தலை மேலும், அவரின் பிடரியிலும் பின்னிய தலை முடி தொங்கிக் கொண்டு இருக்காது. நீண்ட தாடியுள்ள அவர் பெரும் பிரளயம் ஒன்றை ஏற்படுத்துவார். அவர் அழைப்பு கூவி மக்களை அழைப்பார். பன்றியிறைச்சி நீங்கலாக ஏனைய நல்ல உணவுகளை எல்லாம் அவர் உண்பார். அன்னாரின் மார்க்கம் ஏனைய எல்லா மார்க்கத்தையும் மாற்றி விடும். அவரின் மக்களை நாம் ‘முஸ்லீ’ என்கிறோம். அவருக்கு இம்மார்க்கதை மகா இறைவன் தான் வழங்கினான் என்று கூறினார். (பஹா விஷ்ய புராண், 27-23/3/3/3)

எனவே தொழுகைக்கு ‘அதான்’ எனும் அழைப்பு கூவி அழைப்பதும், பன்றி இறைச்சியைத் தவிர்ப்பதும் இஸ்லாம் மார்க்கத்தின் வெளிப்படையான  தனிச் சிறப்புக்களில் ஒன்றாகும். இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுவோர், முஸ்லிம் என்றே அழைக்கப்படுகின்ற போதிலும் இங்கு ‘முஸ்லீ’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இவையிரண்டும் ஒரே அடிப்படையைக் கொண்ட ஒன்றோடொன்று தொடர்புடைய நெருக்கமான சொற்களாகும் என்பது இங்கு குறிப்படத் தக்கதாகும்.

 இதில் அடங்யிருக்கும் சொற்கள் யாவும் ஒரே அடிப்படையைக் கொண்டவை என்றபடியால் இந்துக் கொள்கையின் பிரகாரம் நீங்கள் இஸ்லாமியக் கோட்பாட்டையும், முஹம்மது நபியவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தையும் ஏற்றுக் கொள்வற்கு உங்களுக்கு இந்து மதம் அனுமதி தந்தள்ளது என்பது தெளிவு. ஏனெனில் “இந்துக் கொள்கையின் சிறப்பு யாதெனில் அதற்கென அடிப்படைக் கோற்பாடொன்று இல்லாதிருப்பதுதான், எனவே இது பற்றி என்னிடம் கேட்டால், அதன் கோற்பாடானது பிடிவாதத்தை விட்டும் நீங்கியிருப்பதும், சிறந்த வழிகள் மூலம் உண்மையைத் தேடுவதும்தான், எனவே சிருஷ்ட்டி கர்த்தாவின் இருப்பை ஏற்றுக்கொள்வதும், அதனை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் சமம் ஆகையால் எந்தவொரு இந்துவும் அவர் இந்துவென்ற கோதாவில் சிருஷ்டி கர்த்தாவின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டுமென்ற கட்டாயமில்லை. ஆகையால் அவர் இறைவன் மீது விசுவாசம் கொள்வதும், விசுவாசம் கொள்ளாமல் இருப்பதுவும் சமம் என்றே நான் கூறுவேன்” என்று தலைவர் மகாத்மா காந்தி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

“மேலும் இந்து வேதத்தின் சிறப்பு யாதெனில், அது எல்லா வித நம்பிக்கைக கோட்பாடுகளை விட்டும் நீங்கி இருப்பதுதான். எனினும் ஏனைய எல்லா கோட்பாடுகளின் அடிப்படைகளையும் அது சூழ்ந்து கொண்டுள்ளது” என்று மகாத்மா காந்தி அவர்கள் தனது HINDU DHARMA எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.(பக்கம்,529, 530) இதனை கலாநிதி அல்அஃழமீ அவர்கள் தன்னுடைய 

“யூத, கிரிஸ்தவமும், இந்தியாவின் வேதங்களும் பற்றிய ஆய்வு” என்ற நூலில் நகல் பண்ணியுள்ளார்கள். அதிலிருந்தே நான் நகல் பண்ணியிருக்கின்றேன்.

எனவே முந்திய வேதங்களை மாற்றியமைக்கும் இஸ்லாம் மார்க்கத்தப் பற்றி, முந்திய தூதர்கள் யாவரும் முன்னறிவுப்புச் செய்துள்ள இஸ்லாம் மார்க்கத்தின் தூதர் முஹம்மது நபி அவர்களைப்பற்றி ஆய்வு  ‘அதான்’ கூவி அழைப்பு செய்யும் விடயத்திலும், அதன் சிறப்புகளின் பால் கவனம் செலுத்தும் விடயத்திலும்  இந்துக் கொள்கையின் தாராளப் போக்கை நீங்கள் ஏன் பின்பற்றக் கூடாது? நீங்கள் அவ்வாறு செய்யாமல் இருப்பது இஸ்லாத்தின் பார்வையில் மிகவும் பாரிய, பயங்கரச் செயலாகும். இது பற்றி இறைவனின் வேத வாக்கு அல்குர்ஆன் இப்படி உரைக்கின்றது:

وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ

 آل عمران 85

“எவரேனும் இஸ்லாம் அல்லாததை மார்க்கமாக்கிக் கொள்ள விரும்பினால் நிச்சயமாக அவரிடமிருந்து அது அங்கீகரிக்கப்பட மாட்டாது. மறுமையில் அவர் நஷ்டமடைந்தவராகவே இருப்பார்.(3: 85)                                

முற்றும்

https://islamic-invitation.com/book_details.php?bID=1803
http://islamic-invitation.com/lang_show.php?lang_name=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%28Tamil%29&langID=249
 
All copyrights©2006 Islamic-Invitation.com
See the Copyrights Fatwa